Kriya Yoga Sutras of Patanjali and the Siddhas (Tamil)

Kriya Yoga Sutras of Patanjali and the Siddhas (Tamil)

5 7 0 reviews

₹250

Highlights
Author
M. Govindan
Language
Tamil
Binding
Paper back
Publisher
Babaji's Kriya Yoga Trust, Bangalorre
ISBN
9781895383553

பதஞ்சலியின் யோக சூத்திரம் என்னும் நூல் யோகசாதனையின் முக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பதஞ்சலி தமது யோக முறையை “கிரியா யோகம்: விழிப்புணர்வுடன்கூடிய கர்ம யோகம்” என்று அழைக்கிறார். இதுவரை இந்நூலுக்கு விளக்கமளித்துள்ளோர் இதை ஒரு தத்துவநூலாகவே கருதியுள்ளனர். யோக சாதனைகளில் இதன் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்கள், இந்த நூல் பல மறைபொருட்களைக் கொண்டிருப்பதையும் தீட்சை பெற்ற முன்னனுபவம் உடையவர்களே இதன் ஆழ்பொருளை அறிந்துகொள்ள முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்பொழுது உங்கள் முன் உள்ள இந்த புதிய மொழிப்பெயர்ப்பும் விளக்கவுரையும் தன்னை அறிவதற்கும் மெய்யுணர்வு பெறுவதற்கும் உங்களுக்கு வழிகாட்டியாக உதவும். பதஞ்சலியின் ஆழ்ந்த தத்துவ உபதேசங்களை எவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளில் கடைப்பிடிப்பது என்பதை விளக்கும் இந்நூல், ஒவ்வொரு சூத்திரத்தை அடுத்து ஒரு பயிற்சிப் பகுதியையும் கொண்டுள்ளது. கிரியா யோகத்தைப் பயிலுவது ஒரு சக்தி மிகுந்த வாகனத்தை ஓட்டுவதைப் போன்றது. சரியான வரைபடமில்லாவிட்டால் பல மாணவர்கள் போக்குவரத்தின் நெரிசலிலோ முட்டுச்சந்திலோ மாட்டிக்கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது முதன்முறையாக ஒரு தெளிவான வரைபடம், இலக்குகள் குறிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

“எம். கோவிந்தன் அவர்கள் எழுதியுள்ள பதஞ்சலியின் கிரியா யோக சூத்திரம் என்ற இந்த நூல், யோகத்தைப் பற்றிப் பொதுவாக அறிந்துகொள்வதற்கும் யோகசூத்திரங்களைப் பற்றித் தெளிவதற்கும் மிகச் சிறந்த நூலாகும். நான் இதை மனப்பூர்வமாகப் பரிந்துரை செய்கிறேன். உலகம் முழுவதுமுள்ள யோக மாணாக்கர்கள் இதனைப் படித்துப் பெரிதும் பயன் பெறுவர், இவர் கூறியுள்ள வழிகள் மறுக்கமுடியாதவை என்பதை உணருவர்.” திரு. ஜார்ஜ் பியூர்ச்டீன், பி.எச்.டி. ஆசிரியர், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் மற்றும் யோக கலைக்களஞ்சியம் (encyclopedia).

Write a review
Please login or register to review